மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் மற்றும் கொடுங்கையூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி, கிராமப்பகுதிகளில் மலிவு விலைக்கு விற்க முயன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் கடைகளுக்கு முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டுப்போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஷியாமளாதேவி உத்தரவின்பேரில் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் அழகேசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
எம்.கே.பி.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சாம்வர்க்கீஸ், தீபன், மலைசாமி, ஆனந்தன் மற்றும் போலீசார் அடங்கிய இந்த தனிப்படையினர் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தும்படி சைகை காண்பித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார், அந்த மோட்டார்சைக்கிளை விரட்டிச்சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், வியாசர்பாடி பி.வி.காலனி 28-வது தெருவைச்சேர்ந்த அரிகரன் என்ற விஜய்(வயது 22), வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த சங்கரா என்ற லிங்கேஸ்வரன்(21), சோழவரம் அடுத்த அருமந்தையைச் சேர்ந்த நவீன்(21) என்பதும், அந்த பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வீடு, கடைகள் முன் நிறுத்தி இருக்கும் மோட்டார்சைக்கிளை திருடி, அருமந்தையில் உள்ள நவீன் வீட்டின் அருகே ஒரு இடத்தில் மறைத்து வைத்து உள்ளனர்.
அந்த மோட்டார்சைக்கிள்களுக்கு வேறு பெயிண்டு அடித்தும், பதிவு எண்களை மாற்றியும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் மலிவு விலைக்கு விற்க முயன்றதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் கைதான 3 பேரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜார் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story