தமிழிசை மூவரின் பெருமைகள் ‘பார்’ இருக்கும் வரை நிலைத்திருக்கும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு
தமிழிசை மூவரின் பெருமைகள் ‘பார்‘ இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று மூவர் விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.
சீர்காழி,
சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் தமிழிசை மூவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மூன்று நாட்கள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தமிழிசை மூவர் விழா தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பாரதிமோகன் எம்.பி., பாரதி எம்.எல்.ஏ., மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் குணசேகரன் வரவேற்றார்.
மணிமண்டபம்
விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 30 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர் மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், உலகில் மூத்த மொழி தமிழ் மொழி என்று வரலாறு கூறுகிறது. தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை காலத்தால் முற்பட்டவர்கள். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.1 கோடியே 51 லட்சம் மதிப்பில் மூவர்களுக்கு மணிமண்டபம் கட்டி விழாவை தொடங்கி வைத்தார். அது முதல் ஆண்டுதோறும் மூவர்களையும் போற்றி பாடும் வகையில் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. உலகம் உள்ளவரை தமிழ் மொழி்யை வாழவைத்து வாழும், தமிழிசை மூவரின் பெருமைகள் ‘பார்‘ இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.
விழாவில் தாசில்தார் பாலமுருகன் முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, சீர்காழி நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி, செம்மங்குடி கூட்டுறவு வங்கி ராஜமாணிக்கம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பேரூர்கழக செயலாளர் போகர்ரவி, நகர பேரவை செயலாளர் மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அரசு இசைபள்ளி தலைமை ஆசிரியர் ஹேமா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story