விவசாயி தற்கொலை வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு


விவசாயி தற்கொலை வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 26 March 2018 3:45 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு கண்ணக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44), விவசாயி. இவர் அந்த பகுதியில் வாழை விவசாயம் செய்திருந்தார். இதற்காக பலரிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்கியிருந்தார். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவதியடைந்தார்.

இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கினர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை வாழை தோட்டத்திற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால், அவரது மனைவி சந்திரகலா, ராஜேந்திரனை தேடி சென்றார். அப்போது, வாழை தோட்டத்தில் ராஜேந்திரன் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்தவரின் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story