பழனி கோவிலுக்கு தங்க சிலை செய்ததில் முறைகேடு; ஸ்தபதி-முன்னாள் செயல் அலுவலர் கைது


பழனி கோவிலுக்கு தங்க சிலை செய்ததில் முறைகேடு; ஸ்தபதி-முன்னாள் செயல் அலுவலர் கைது
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு தங்க சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக ஸ்தபதி-முன்னாள் செயல் அலுவலரை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்த நவபாசான மூலவர் சிலை கடந்த 2004-ம் ஆண்டு சேதம் அடைந்ததாக கூறி புதிதாக தங்கத்தால் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய சிலையை வடிவமைக்க 10 கிலோ தங்கம் திருத்தணி முருகன் கோவிலில் இருந்து கடனாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய சிலையை வடிவமைக்கும் பொறுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாகத்தை சேர்ந்த ஸ்தபதி முத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையை அவர் வடிவமைத்தார்.

கைது

இதில் பெரும் முறைகேடு நடந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் புதிதாக சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததாக பழனி தண்டாயுதபாணி கோவிலின் முன்னாள் செயல் அலுவலர் கே.கே.ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Next Story