ஓசூர் அருகே 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
ஓசூர் அருகே 500 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழாவை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதனை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டன.
பின்னர் காளைகள் மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டு விழா நடைபெற்றது. அப்போது காளைகள் துள்ளிக்குதித்தும், சீறிப்பாய்ந்தும் சென்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்களும், மாடுபிடி வீரர்களும் விரட்டி சென்று, அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த அலங்கார தட்டிகள் மற்றும் பரிசு பொருட்களை பறிக்க முயன்றனர். இதில், கீழே விழுந்து சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திரளான பொதுமக்கள் பங்கேற்பு
மைதானத்தில் சீறிப்பாய்ந்தவாறு, வீரர்களின் கையில் சிக்காமல் காளைகள் சுற்றி, சுற்றி வந்ததையும், வீரர்களும் சிறிதும் சளைக்காமல் அவற்றை விரட்டியவாறு பின் தொடர்ந்ததையும் கண்டு, திரண்டிருந்த மக்கள் உற்சாக குரல் எழுப்பியவாறு ஆரவாரம் செய்தனர். இந்த விழாவில், சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.வி.எம். மது என்ற ஹேம்நாத், முன்னாள் ஓசூர் நகர்மன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஷ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், ஓசூர், சூளகிரி, பேரிகை, புக்கசாகரம், ஆலூர், கானலட்டி, தோரிப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாநிலங்களின் பல்வேறு இடங்களில் இருந்தும் திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து, எருது விடும் விழாவை கண்டு ரசித்தனர்.

Related Tags :
Next Story