கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம், பொதுமக்கள் பீதி
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரில் உள்ள காம்பாய்கடை , மாரியப்பன் தெரு, ஹேப்பி வேலி , கார்சிலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகள் கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து கோத்தகிரி போரூராட்சி நிர்வாகம் சார்பில் மாரியப்பன் லைன், கீஸ்டோன் சாலை உள்ளிட்்ட கரடிகள் நடமாட்டம் இருந்த பகுதிகளில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர் செடிகள் அகற்றப்பட்டது. இதன் காரணமாக கரடிகள் நடமாட்டம் கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக 2 கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. மேலும் அந்த கரடிகள் 2-ம் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பீதி அடைந்து உள்ளனர். இந்த கரடிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சிவ பார்வதி, வனக் காப்பாளர் முருகன், தருமன் உள்பட வனத்துறையினர் மாரியப்பன் தெரு பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்து கரடிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகிலிருந்த தேயிலை தோட்டத்திற்குள் அந்த கரடிகள் ஓடி ஒளிந்து கொண்டன.
இந்த நிலையில் மீண்டும் அந்த கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத்தொடங்கியுள்ளன. இதனால் இங்குள்ள பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து பல மாதங்களாக கரடிகள் நடமாட்டம் இருந்து வருவதால் கரடிகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:-
இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் வீட்டில் மீதமாகும் உணவு, பழங்களை உள்ளிட்டவற்றை குப்பை தொட்டிகளில் போடவேண்டாம். அவற்றை உண்பதற்காக கரடிகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே வீடு தோறும் குப்பைகளை சேகரிக்கும் தூய்மை காவலர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும்.
மேலும் இந்த பகுதிகளில் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் புதருக்குள் கரடிகள் மறைந்திருந்து மனிதர்களை தாக்கும் அபாயம் இருக்கிறது. எனவே கோத்தகிரி போரூராட்சி நிர்வாகத்திடம் பேசி உடனடியாக புதர்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையினர் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதுடன் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story