கூட்டுறவு தேர்தலில் ‘சீட்’ கிடைக்காதோருக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
கூட்டுறவு தேர்தலில் ‘சீட்’ கிடைக்காதோருக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு தரப்படும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசி,
கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பாக மாவட்ட வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருதுநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேசும்போது, கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றிபெறுவார்கள். விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக திகழ்கின்றது. இந்த மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்று சாதனை படைப்பார்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது கூறியதாவது:-
கூட்டுறவு சங்க தேர்தலில் அனைத்து பதவிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நமக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை கூட்டுறவு சங்க தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று நிரூபித்து காண்பிப்போம். நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். ஜெயலலிதா மீது பொய்யான வழக்கு தொடர்ந்து அவரின் உடல்நலம் குன்றுவதற்கு காரணமாக இருந்த தி.மு.க.வை நாம் வளரவே விடக்கூடாது.
கூட்டுறவு சங்க தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ, அங்குதான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட தலைவர்கள், ஒரு இலை ஒ.பி.எஸ்., மற்றொரு இலை இ.பி.எஸ். என்ற வகையில் கட்சி செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் ‘சீட்’ கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி என்பது நமக்கு இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., முன்னாள் அமைப்பு செயலாளர் விநாயக மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story