வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி 27 ஆண்டுகளாக போராடும் மக்கள்
ஒடுகத்தூர் அருகே வீட்டு மனைப்பட்டா கேட்டு 26 ஆண்டுகளாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கட்டு,
ஒடுகத்தூர் பேரூராட்சி வெங்கனபாளையம் 15-வது வார்டில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வீடுகட்ட தேவையான இடவசதி இல்லை. எனவே, அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 1990-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் வெங்கனபாளையம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியில் 1½ ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து 1991-ம் ஆண்டு பீஞ்சமந்தையில் நடைபெற்ற அரசு விழாவில் அப்போதைய அமைச்சர் பாண்டுரங்கன் தலைமையில், வெங்கனபாளையம் பகுதியை சேர்ந்த 18 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மீதி உள்ள 12 பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
வீட்டு மனைப்பட்டா கிடைக்காதவர்கள் வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு பல ஆண்டுகளாக நடையாய் நடந்தும் வீட்டு மனைப்பட்டா கிடைக்கவில்லை. 30 பேருக்கும் வீட்டு மனைப்பட்டா கிடைத்தால் தான் 1½ ஏக்கர் நிலத்தை அளந்து அனைவருக்கும் பிரித்து கொடுக்க முடியும். 18 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கியும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 27 ஆண்டுகளாக தொடர்ந்து வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று மீதியுள்ள 12 குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் ஒதுக்கியும் இத்தனை ஆண்டுகள் வீட்டுமனைப்பட்டா வழங்காமல் அதிகாரிகள் ஏன் காலம் கடத்தி வருகின்றனர் என்று தெரியவில்லை. எனவே, விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story