வேலூரில் குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
வேலூரில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர்,
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு (உயிர்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவக்காலமான சாம்பல் புதன் கடந்த பிப்ரவரி மாதம் திருப்பலியுடன் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர், ஒரு கோவேறு கழுதை குட்டியின் மீது அமர வைத்து ஜெருசலேம் நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, “ஓசன்னா! தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, ஓசன்னா... ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ‘குருத்தோலை ஞாயிறு’ ஆக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று ‘குருத்தோலை ஞாயிறு’ விழா நடந்தது.
குருத்தோலை ஞாயிற்றை முன்னிட்டு வேலூர் விண்ணரசி பேராலயம் அருகில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் இருந்து நேற்று காலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசன்னா.. பாடலை பாடியபடி சென்றனர்.
ஊர்வலம் விண்ணரசி மாதா பேராலயத்தை அடைந்ததும் அங்கு வேலூர் கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் சவுந்தரராஜூ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
அதேபோல் வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தை அடைந்தது. பின்னர் ஆயர் சாது சத்தியராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வேலூர் ஓல்டுடவுனில் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஆரோக்கியமாதா ஆலயம் வரை ஊர்வலம் சென்றது. பின்னர் சிறப்பு திருப்பலி நடந்தது.
வேலூர் தோட்டப்பாளையம் அருளானந்தர் ஆலயம், சத்துவாச்சாரி செயின்ட்பால்ஸ் ஆலயம், காட்பாடி சி.எஸ்.ஐ. ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.
வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) ‘பெரிய வியாழன்’ ஆக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று மாலை தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கும் நடைபெறும். திருப்பலிக்கு பிறகு நற்கருணை இடமாற்ற பவனியும், அதை தொடர்ந்து ஆராதனையும் நடைபெறும்.
வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பெரிய வெள்ளி என்றும், புனித வெள்ளி என்றும், ஆண்டவரின் திருப்பாடுகளின் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. அன்று இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து கொண்டு செல்லும்போதும், சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானமும், சிலுவை ஆராதனையும் நடக்கிறது.
ஏப்ரல் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உயிர்ப்பு (ஈஸ்டர்) பெருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருப்பவர்கள், தங்கள் விரதத்தை முடித்து, விருந்துண்டு மகிழ்வார்கள். நண்பர்களுக்கும் விருந்தளித்து உயிர்ப்பு பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

Related Tags :
Next Story