விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
கோவில்பட்டியில் வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ள குடிநீர் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி மந்திதோப்பில் இருந்து குருமலை வரையிலும் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.3 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா முன்னிலை வகித்தார்.
செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர், மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி வனச்சரகம் குருமலை காப்புக்காடு ஊத்துப்பட்டியில் மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது.
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டியில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
இதனை வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் 14 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், பெருவாரியான மக்களின் ஆதரவால் அமோக வெற்றி பெற்றது. ஆனால் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும், அவர்களின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. வருகிற 2021-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. சிறப்பாக ஆட்சி நடத்தும். தொடர்ந்து அதற்கு அடுத்த தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
நடிகர் கமல்ஹாசன் தனது இருப்பை வெளிக்காட்டுவதற்காக அவ்வப்போது ஏதேனும் கருத்தை கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க.வுக்கோ, தமிழக அரசுக்கோ எந்தவித பாதிப்பும் கிடையாது.
கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட 2-வது குடிநீர் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) கோவில்பட்டி- மந்திதோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2-வது குடிநீர் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இதை தொடர்ந்து முதல்- அமைச்சர் பங்கேற்க உள்ள விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மாவட்ட வன அலுவலர் சம்பத், நெடுஞ்சாலைத்துறை நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர் ஆன்ட்ரூஸ், வனச்சரகர்கள் சிவராம், விமல்குமார், நெல்லைநாயகம், லோகசுந்தரநாதன், பெரியசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story