திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 2 பேர் கைது


திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2018 3:30 AM IST (Updated: 27 March 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பெரியக்குப்பம் கற்குழாய் தெருவில் மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த பெரியக்குப்பம் கற்குழாய் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பெரியக்குப்பத்தை சேர்ந்த மணி என்ற மணிவண்ணன்(வயது 32), தணிகாச்சலம்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

Next Story