மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி வரும் மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
தூத்துக்குடி,
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 1994-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1996-ல் உற்பத்தியை தொடங்கியது. அப்போதே மக்கள் போராட்டம் நடத்தினர். தற்போது, தொழிற்சாலையை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர்ந்து 43-வது நாளாக போராடி வருகின்றனர். இந்த மக்களின் போராட்ட உணர்வை மத்திய, மாநில அரசு மதிக்க வேண்டும்.
அதே போன்று ஆலை நிர்வாகத்துக்கும் அந்த சிந்தனை வேண்டும். இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும், சுற்றுச்சூழலை பாதிக்கும், கழிவுகள் கடலுக்குள் சென்றால் கடல் மாசுபடும், மீன்கள் இறக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தி உள்ளோம். மக்கள் உணர்வுகளை மதிக்கவில்லையென்றால், இந்த போராட்டம் தூத்துக்குடியில் பெரிய அளவில் மாறும். அதற்குள் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. போராட்ட மக்களுக்கு துணை நிற்கும்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை காவிரி மேலாண்மை வாரியம். தமிழ்நாட்டில் வாழ்வாதார உரிமை நாளுக்கு நாள் பறிபோய் வருகிறது. தற்போது ஒட்டுமொத்த காவிரி உரிமை பறிபோய் விடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காவிரி மேற்பார்வை வாரியம் அமைப்பது, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொதிப்பாக உள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் 30-ந் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் எல்லோரும் போராடும் சூழ்நிலை உருவாகும். தமிழ்நாடு அரசு முன்னால் செல்ல முடியவில்லை. மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக துணிந்து நிற்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதில் தமிழ்நாடு அரசு முனைப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story