காசோலை மோசடி வழக்கில் நீதி கேட்டு விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காசோலை மோசடி வழக்கில் நீதி கேட்டு விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் கே.கே. சாலையை சேர்ந்தவர் பத்மநாபன் மனைவி கலையரசி (வயது 50). இவர் நேற்று காலை விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வந்தார். அங்குள்ள வளாகத்திற்கு வந்த அவர் திடீரென தான் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்ற முயன்றார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று கலையரசியை தடுத்து நிறுத்தி அவர் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினார்கள். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 2013-ம் ஆண்டு சாலாமேட்டை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தான் வீடு கட்டுவதாகவும், ரூ.10 லட்சம் கடன் வேண்டும் என கேட்டிருந்தார். அந்த சமயத்தில் எனக்கு என்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து பாகப்பிரிவினை செய்யப்பட்டதன் மூலம் சொத்து கிடைத்தது. அதன் மூலம் அந்த நபர் கேட்ட ரூ.10 லட்சத்தை நான் கடனாக கொடுத்தேன். ஆனால் பல மாதங்களாகியும் அவர் அந்த கடனை எனக்கு திருப்பித்தரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் சென்று கேட்டபோது எனக்கு ஒரு காசோலை கொடுத்தார். அவர் கொடுத்த காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றபோது அவரது கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதி கேட்டு தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறினார்.இதையடுத்து கலையரசியை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story