சிதம்பரத்தில் தலை வலிக்காக கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் சாவு
சிதம்பரத்தில் தலை வலிக்காக மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் சத்யா நகரை சேர்ந்தவர் பாபுராஜ் மனைவி சத்யா (வயது 24). சம்பவத்தன்று இவருக்கு தலை வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருந்து கடை ஒன்றில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து சத்யாவின் தாய் பச்சையம்மாள் சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா தலைவலியால் ஏற்பட்ட பாதிப்பால் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது மருந்து கடையில் ஏதேனும் தவறாக கொடுக்கப்பட்ட மாத்திரையை வாங்கி சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story