பருவமழை பொய்த்ததால் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பருவமழை பொய்த்ததால் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை பொய்த்ததால் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்து பயிர்கள் பாதிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மிளகாய் மற்றும் சிறுதானிய பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், தாலுகா செயலாளர்கள் ராமநாதபுரம் கல்யாண சுந்தரம், கீழக்கரை முருகேசன், திருவாடானை சேதுராமு, முருகுளத்தூர் முருகேசன், பரமக்குடி மகாலிங்கம் உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story