மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாமை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தினால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதனால் வாக்குச்சீட்டு முறையை கர்நாடக தேர்தலில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட அரசியல் கட்சி தலைவர்களும், மக்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் கர்நாடகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதை மக்களிடையே தெரியப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்திருந்தது. அதன்படி, பெங்களூரு லால்பாக்கில் நேற்றுமுன்தினம் இந்த விழிப்புணர்வு முகாமை மாநில தேர்தல் தலைமை அதிகாரி சஞ்சீவ்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து கொண்டு, அதில் எப்படி ஓட்டுப்போட வேண்டும், யாருக்கு ஓட்டுப்போட்டுள்ளோம் என்பதை அறிந்து கொள்வது எப்படி ஆகியவை தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மக்களுக்கு உரிய விளக்கம் அளித்தார்கள். மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதை பற்றியும் மக்களிடையே அதிகாரிகள் தெளிவாக எடுத்து கூறினார்கள். அதே நேரத்தில் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை ‘வி.வி.பேட்’ என்ற எந்திரத்தின் மூலமாக 7 நொடிகளில் அறிந்து கொள்வது பற்றியும் மக்களிடையே எடுத்து கூறப்பட்டது.
இதுபோல, பெங்களூரு நகரில் கப்பன்பார்க் உள்ளிட்ட பூங்காக்களிலும், வணிகவளாகங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தார்கள். இந்த முகாம் அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெற வாய்ப்பே இல்லை. இணையதளம், ‘புளூடூத்’ மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள தகவல்களை மாற்றவோ, அழிக்கவோ முடியாது. அதுபற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை. தேர்தலுக்கு முன்பாக 3 முறை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை அரசியல் கட்சி தலைவர்களின் முன்னிலையிலேயே நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒரே கட்சிக்கே ஓட்டுகள் விழுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை போக்கத்தான் ‘வி.வி.பேட்’ எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட்டுள்ளோம் என்பதை, அந்த எந்திரத்தின் மூலமாக 7 நொடிகளில் தெரிந்து கொள்ளலாம். ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளிலும், வாக்குச்சாவடிகள் முன்பாக ‘வி.வி.பேட்’ எந்திரம் பற்றி மக்களிடையே தெளிவாக எடுத்து கூறப்படும். அதே நேரத்தில் ஓட்டுப்போடும் போது வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கூட, அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து, அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள். பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மாவட்ட கலெக்டர் தயானந்த் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story