கள்ளக்குறிச்சியில் முன்விரோத தகராறில் கைதான விவசாயி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சியில் முன்விரோத தகராறில் கைதான விவசாயி, போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கள்ளக்குறிச்சி,
திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முருகன்(வயது 35). இவருக்கும் சங்கராபுரம் அருகே உள்ள செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ்(33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன், மோட்டார் சைக்கிளில் கொசப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த செல்வராஜ் அவரை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து செல்வராஜை சங்கராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி சண்முகம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, செல்வராஜை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 போலீஸ்காரர்கள், செல்வராஜை கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அந்த சமயத்தில் செல்வராஜ், சிறுநீர் கழித்து விட்டு வருவதாக போலீஸ்காரர்களிடம் கூறினார். அதற்கு அவர்களும் சென்று வர அனுமதித்தனர். இதையடுத்து செல்வராஜ், சிறுநீர் கழிப்பது போல் கழிப்பறைக்கு சென்றார். பின்னர் அவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையில் சிறுநீர் கழிக்க சென்ற செல்வராஜ், வெகுநேரமாகியும் வராததால் போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸ்காரர்கள், கழிப்பறைக்கு சென்று பார்த்தனர். அங்கு செல்வராஜ் இல்லை. அப்போதுதான், அவர் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள், நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து செல்வராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story