புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார்
புதுவை சட்டசபை கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து காரில் சட்டசபைக்கு அவர் வந்தார். அந்த நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின்படி தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சட்டசபை பிரதான நுழைவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கவர்னரின் கார் சட்டசபையில் இருந்து வாகனங்கள் வெளியேறும் பகுதி வழியாக சட்டசபை வளாகத்துக்குள் சென்றது. சட்டசபை வளாகத்திற்குள் கவர்னருக்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னர் கிரண்பெடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்ட சபைக்கு அழைத்துச் சென்றார். கவர்னர் நேராக சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார்.
இதன்பின் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். காலை 9-30 மணிக்கு உரையாற்ற தொடங்கிய அவர் தனது உரையை 10-10 மணிக்கு முடித்தார். இதைத்தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் படித்தார். 10-50 மணிவரை இந்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி சட்டசபையில் இருந்து விடைபெற்று சென்றார்.
கவர்னரின் செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாக அவரது உரையை புறக்கணிக்கப்போவதாக ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் அறிவித்திருந்தார். அதன்படி அவர் நேற்று கவர்னர் உரையாற்றியபோது சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அவர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கவர்னர் உரையாற்றியபோது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்து, சுகுமாரன், சந்திர பிரியங்கா, கோபிகா ஆகியோர் சபையில் அமர்ந்திருந்தனர். கவர்னர் உரைக்குப் பின் இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தபோது அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Tags :
Next Story