என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு
என்ஜினீயர், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மத்திய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 244 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சர்டிபிகேசன் என்ஜினீயர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட். சுருக்கமாக சி.ஈ.ஐ.எல். என குறிப்பிடப்படும் இந்த நிறுவனம் தகவல் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்புக்கான கடலடி பைப்லைன்களை உருவாக்கிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சீனியர் டெபுடி கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி பிளானிங் என்ஜினீயர் உள்பட பல்வேறு பணிகளுக்கு 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
139 பணியிடங்கள் உள்ள அறிவிப்பில் சீனியர் கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் பணிக்கு 54 பேரும், டெபுடி கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் பணிக்கு 21 பேரும், சீனியர் சேப்டி ஆபீசர் பணிக்கு 22 பேரும், டெபுடி பிளானிங் மேனேஜர் பணிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர், டெபுடி சேப்டி மேனேஜர், சீனியர் வேர்ஹவுஸ் ஆபீசர், டெபுடி வேர்ஹவுஸ் மேனேஜர் போன்ற பணிக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 35 முதல் 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 31-1-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 31-3-2018-ந் தேதியாகும்.
105 பணிகள்
மற்றொரு அறிவிப்பின்படி எஸ்.சி.எம். (காண்டிராக்ட் அண்ட் பர்ச்சேஸ்) பணிக்கு 68 பேரும், எஸ்.சி.எம். (இன்ஸ்பெக்சன், புரோகியூர்மென்ட் டெவலப்மென்ட்) பணிக்கு 32 பேரும், பிளானிங் என்ஜினீயர் பணிக்கு 5 பேரும் தேர்வு செய்யப்படு கிறார்கள். இந்த பணிகளுக்கு பட்டதாரி என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31-1-2018 தேதியில் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.
இவை பற்றிய விவரங்களை http://ceil.co.in / என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 31-3-2018-ந் தேதியாகும்.

Related Tags :
Next Story