திரையரங்கில் தொலையும் கவலைகள்
இன்று (மார்ச் 27-ந்தேதி) உலக திரையரங்குகள் தினம்.
உலகளவில் எவ்வளவுதான் விஞ்ஞானம் முன்னேறி இருந்தாலும், மனிதன் எந்த மொழியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட, தேவைப்படும், தேவைப்படப்போகும் பொழுதுபோக்கு சினிமா என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட சினிமாவை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா திரையரங்குகள்தான். விஞ்ஞான முன்னேற்றத்தால் ஹோம் தியேட்டர் என்று வீட்டில் வைத்து படங்களைப் பார்த்தாலும் சினிமாவை திரையரங்கிற்கு வந்து பார்க்கும் அனுபவம் கிடைக்காது. கிடைக்க வாய்ப்பும் இல்லை. காரணம், தியேட்டரில் தான் கவலைகள் தொலை கின்றன.
தமிழ்நாட்டில் முதல் சினிமா தியேட்டர் தோன்றியது 1916-ம் ஆண்டு ஆகும். சினிமா முதன்முதலில் வந்தபோது திரையில் படம் மட்டும் ஓடும். வசனம் முதலிய ஒலிகள் அனைத்தும் ஒரு கிராமபோன் பெட்டி வழியாக வெளியே வரும். அந்த கிராமபோன் வாயில் பகுதியில் பேப்பரை சுருட்டி வைத்து ஒலியை கட்டுப்படுத்துவார்கள்.
இப்படி சினிமா ஆரம்பித்த புதிதில் 21 பாடல்கள் முதல் 25 பாடல்கள் என்று ஒலியை மையமாக வைத்து படங்கள் தயாராகின. அதனால் தியாகராஜ பாகவதர் போன்றோர் பிரபலமானார்கள். பின்னர் சினிமாவும், திரையரங்குகளும் படிப்படியாக முன்னேறின. அதன் தொடர்ச்சியாக திரையரங்குகள் ‘ஏர் கண்டிஷன்’ செய்யப்பட்டன. கருப்பு வெள்ளை படங்கள், கேவா கலர், டெக்னி கலர், ஈஸ்ட்மென் கலர் என்று பல வண்ணப்படங்கள் வர ஆரம்பித்தன. அந்த கலர் நன்றாக வர வேண்டும் என்று நமது நடிகர்களும் பச்சை பேண்ட், சிகப்பு பேண்ட் போட்டு நடிக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த காலகட்டத்தில் மிக தத்ரூபமான படங்கள் எடுக்க தொடங்கினார்கள். நிஜ வாழ்க்கையைப் போல் காண்பிக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. இப்படங்களை நாம் கலைப் படங்கள் என்று கூறினோம். மற்ற ஜனரஞ்சகமான படங்களை நாம் கமர்ஷியல் படங்கள் என்று கூறினோம்.
இப்படி சினிமா வளர்ந்து வந்து கொண்டிருக்கும் போது போட்டிக்கு வந்தது டெலிவிஷன். டெலிவிஷன் போட்டியை சமாளிக்க சினிமாவில் பல புதிய பரிணாமங்கள் ஏற்பட்டன. அதில் முக்கியமானது 3டி படம். 3டி கண்ணாடிகள் அணிந்து கொண்டு இப்படங்களை பார்த்தால் மிகவும் நேரடியாக பார்ப்பது போல் உணர்வினை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு படத்தில் யாராவது துப்பாக்கியால் சுடும் காட்சி வந்தால் நம்மை நேரடியாக சுடுவது போன்ற பிரமையை இந்த 3டி சினிமாக்கள் ஏற்படுத்தும்.
அடுத்தபடியாக ஒலியில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அதில் முதலில் வந்தது 6 டிராக் ஸ்டீரியோபோனிக் சவுண்ட் சிஸ்டம். அடுத்து வந்தது டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டம் (டிஜிட்டல் தியேட்ரிகல் சவுண்ட் சிஸ்டம்). தியேட்டரைச் சுற்றி திரையரங்கின் அளவிற்கு ஏற்றாற்போல் 8-ல் இருந்து 20 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு, ஒரு ரெயில் வருவதைப்போன்ற காட்சி திரையில் காட்டப்படும்போது, அந்த ரெயில் வரும் முன்னரே திரையின் பின்னால் உள்ள ஒலிபெருக்கியில் இருந்து ரெயில் சத்தம் வரும். பின்னர் படிப்படியாக வலதுபுறமும், இடதுபுறமும் இந்த ரெயில் சத்தம் வந்து ரெயிலுக்கு முன்னால் இருந்து சவுண்ட் வந்து ரெயில் சென்ற பிறகு தொடர்ந்து மெல்ல சத்தம் குறையும். இப்படி ஒரு தத்ரூபமான ஒலியை ஏற்படுத்துவது டிடிஎஸ்.
இதற்கு அடுத்து வந்தது அட்உதாரணத்திற்கு சினிமாவில் இடி, இடிப்பது போல் காட்சி வந்தால், திரையரங்கில் தலைக்கு மேலிருந்து ஒலி கேட்கும். அது மிக தத்ரூபமாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் சினிமா சுருளில் படமெடுப்பது நிறுத்தப்பட்டு டிஜிட்டல் ஆக்கப்பட்டது. டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட சினிமாக்கள் பெரும் அளவில் படம் எடுக்கும் செலவைக் குறைத்தன. திரையில் படம் பார்க்கும் போது டிஜிட்டல் புரொஜக்டர்கள் மூலம் படம் காண்பிக்கும்போது திரைப்படங்கள் மிகமிக துல்லியமாக இருந்தது. அதன் பிறகு வந்தது ‘டிசினிமா 2கே’ முறை. அதன்பிறகு 4கே. அதன் பிறகு லேசர் புரொஜக்ஷன். இப்படியாக விஞ்ஞானம் முன்னேற முன்னேற சினிமாவில் காண்பிக்கும் ஒலிகளும் மிக மிக தத்ரூபமாக மாற்றி கொண்டு வரப்பட்டது.
இதே போல, பொது மக்கள் வசதிக்காக திரையரங்குகளில் படுத்துக் கொண்டே படம் பார்ப்பது போல் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் சில இருக்கைகள் உடம்பை பிடித்துவிடும் மசாஜ் போன்ற அமைப்பைக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டன. இவற்றையெல்லாம் செய்வதற்கு காரணம் விஞ்ஞான வளர்ச்சியால் டெலிவிஷன் தியேட்டர்களுடன் போட்டி போடுவதுதான்.
எவ்வளவுதான் வீட்டில் படம் பார்த்தாலும் அது தியேட்டரில் படம் பார்ப்பதற்கு இணையாகாது. ஏனெனில் தியேட்டர்களில் படம் பார்க்கும்போது எந்த விதமான இடையூறுகளும் இருக்காது. திரையரங்குகளில் படம் பார்க்கும்போது, விளக்குகளை அணைத்து உங்களை வேறு உலகத்திற்கே கொண்டு சென்றுவிடுவார்கள்.
மக்கள் தங்கள் கவலைகளை முற்றிலும் மறந்து வேறு உலகத்திற்கு சென்று விடுவார்கள். இவையனைத்தும் சினிமா தியேட்டரில் தான் சாத்தியமாகிறது. சினிமா தியேட்டர்கள் இயங்காவிட்டால் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தியேட்டர் தினம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
- அபிராமி ராமநாதன், தலைவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்

Related Tags :
Next Story