வரும்.... ஆனா வராது...?
இந்த தலைப்பு சிலருக்கு நகைச்சுவையாக இருக்கலாம். சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 16-ந்தேதி வழங்கிய இறுதித் தீர்ப்பை படித்துப்பார்த்த பலரது நிலைமை தற்போது அப்படித்தான் இருக்கிறது.
யானைப் பார்த்த பார்வையற்றவர்கள் பற்றிய கதையை கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த கதைதான் இந்த விவகாரத்திலும் பலரது மண்டையை குழப்பிக் கொண்டு இருக்கிறது.
கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 14.75 டி.எம்.சி. குறைத்து தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நீர் பங்கீடு சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த, நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்புகளை உருவாக்குவதற்கான ‘ஸ்கீம்’மை (செயல்திட்டம்) மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது.
அந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைதான் குழப்பத்துக்கு காரணமாக அமைந்தது. இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்துகொண்டு உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு தகுந்தபடி அர்த்தம் புரிந்துகொண்டு, அதை நியாயப்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.
நடுவர் மன்றம் ஏற்கனவே தனது இறுதித்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்குமுறை குழுவும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது. எனவே ‘ஸ்கீம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டது இந்த இரண்டையும்தான் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை, 6 வார ‘கெடு’ முடிவதற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.
ஆனால் கர்நாடக அரசோ, “சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைப்பது பற்றி எந்த இடத்திலும் கூறவில்லை” என்று அடித்துக் கூறுகிறது.
தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் மத்திய அரசோ, கர்நாடகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது.
‘ஸ்கீம்’ என்ற வார்த்தை பற்றிய புரிதலில் மாற்று கருத்துகளும், குழப்பங்களும் உருவானதுமே, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடி, அதுபற்றிய விளக்கத்தை பெற்று இருக்கலாம். ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால், அதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும், ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது எனவும், அதை செயல்படுத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாமரை இலை தண்ணீர் போல் பட்டும் படாமல் பேசி இருக்கிறார்.
அத்துடன், வருகிற 30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறி டெல்டா விவசாயிகள் தலையில் ஒரு குண்டை போட்டு உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் 6 வார ‘கெடு’ 29-ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், நீர்வளத்துறை செயலாளர் இவ்வாறு கூறி இருப்பதன் மூலம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்தும் நிலையில் மத்திய அரசு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக ‘காவிரி மேற்பார்வை ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு இனிமேலும், அழுத்தம், வற்புறுத்தல், தீர்மானம் என்று ஜல்லியடித்துக் கொண்டு இருந்தால், எந்த பலனும் ஏற்படாது.
சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு கூறியதா? இல்லையா? என்பதை பற்றிய உண்மை தெரிஞ்சாகணும்...
எனவே தீர்ப்பு குறித்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டவேண்டும். “ஸ்கீம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சொன்னீர்களே? அந்த ‘ஸ்கீம்’ என்று நீங்கள் குறிப்பிட்டது காவிரி மேலாண்மை வாரியத்தைத்தானா? அல்லது வேறு ஒன்றையா? என்பதை தெளிவுபடுத்துங்கள்” என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போதுதான் சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து குழப்பம் இல்லாத, தெளிவான பதில் கிடைக்கும். தீர்ப்பு வெளியான மறுநாளே சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக அரசு இந்த காரியத்தை செய்து இருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இனியும் தாமதிக்காமல் சுப்ரீம் கோர்ட்டை நாடி தெளிவு பெறவேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது தெளிவாக தெரியும் பட்சத்தில், அதை அமைக்க மறுக்கும் மத்திய அரசின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம்.
இல்லாவிட்டால் மத்திய அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வருங்காலத்தில் டெல்டா விவசாயிகள் வானத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
“விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்” என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
-ராம்ஸ், சென்னை

Related Tags :
Next Story