வெளிநாட்டுக் கல்வி: மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!
பிரகாசமான எதிர்காலம் கருதி, வெளிநாட்டுக் கல்வியை தேர்வு செய்ய நினைக்கும் மாணவர்கள் பெருகி வருகிறார்கள்.
பள்ளித் தேர்வுகள் முடியும் இந்த சமயத்தில், வெளிநாட்டுக் கல்விக் கனவுடன் இருக்கும் மாணவர்கள் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்...
* வெளிநாட்டில் சில படிப்புகளை குறைந்த செலவில் படிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணம் செல்பவர்கள், பல விஷயங்களையும் யோசிக்க வேண்டும். ஏனெனில் அங்கு கல்விச் செலவு மட்டும் செலவல்ல. தங்குமிடம், வாடகை, சாப்பாடு ஆகியவற்றுக்கு படிப்புக்கு ஆகும் செலவைவிட அதிகம் செலவிட வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
* வெளிநாட்டுக் கல்விக்கு செலவிடும் தொகை, எதிர்காலத்திற்கான முதலீடுபோல பார்த்துக் கொள்ள வேண்டும். ‘படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை வாங்கி, அப்படியே செட்டிலாகி விடவேண்டும்‘ என்ற லட்சியம் உள்ளவர்களுக்கே வெளிநாட்டுக் கல்வி ஏற்றது. அப்படி, படிக்கும் நாட்டிலேயே செட்டிலாக விரும்புபவர்கள், நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறீர்களோ, அந்த நாட்டில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ள படிப்பையே தேர்வு செய்ய வேண்டும்.
* வெளிநாட்டில் படிக்கச் செல்வதற்கு வெறும் ஆர்வமும், பணமும் மட்டும் போதாது. நிறைய அடிப்படை விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் பெற்றோரை விட்டு தனித்திருக்கப் பழக வேண்டும். வீட்டிலிருந்து அருகிலுள்ள பள்ளி, கல்லூரிக்கு தினசரி சென்று வந்தவர்கள், அருகில் உள்ள நகரத்தில் தங்கியிருந்து படித்துவிட்டு, வார விடுமுறை கிடைத்தாலே ஊருக்கு பறந்துவிட ஆசைப்படுபவர்களுக்கு இது கொஞ்சம் சிரமமான காரியம்.
* தாங்கள் பயணிக்கும் நாட்டில் உள்ள புதிய கலாசாரத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். மொழித் தடையையும் சமாளிக்கப் பழக வேண்டும்.
* நாட்டின் தட்பவெப்பம் உங்களுக்குப் பொருந்த வேண்டும். கனடா மிகுந்த குளிர் நிலவும் நாடு. அரபு நாடுகளில் வெப்பம் மிகுதி. அங்கு சென்று ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பியவர்கள் உண்டு. அதனால் உங்கள் உடல்நிலைக்கும் மனநிலைக்கும் பொருந்தும் நாட்டைத் தேர்வு செய்வது நல்லது.
* நீங்கள் படிக்கச் செல்லும் கல்வி நிறுவனம் உலகத் தரப்பட்டியலில் இருக்கிறதா?, அதற்கு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறதா?, இதற்கு முன்பு அங்கு படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறதா? என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* கல்வி நிறுவனங்களின் தரம் பற்றிய பட்டியல் பல்வேறு இணையதளங்களிலும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை அலசிப் பார்க்கலாம். இரண்டாவதாக அந்தந்த நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களின் பட்டியலும் இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. அவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். இப்போதைய நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நீங்கள் விரும்பும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்களின் நட்பு உருவாக்கிக் கொண்டு உங்களுக்குத் தேவையான அடிப்படை விவரங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
* இங்கிருக்கும் மன உறுதி, அங்கு சென்ற பிறகு அப்படியே மாறும் நிலை ஏற்படலாம். எனவே அங்குள்ள சூழலை சகித்துக் கொண்டு, ‘படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப மாட்டேன்’ என்கிற உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால்தான் சாதிக்க முடியும்.
* கண்காணிப்பற்ற சுதந்திரம் பலரையும் தடம் மாற்றிவிடும். வெவ்வேறு நாட்டு மாணவர்களின் நட்பு, பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத சூழலில் மிகுந்த பொறுப்புணர்வு இருந்தால்தான் தடம்புரளாமல் படித்து முடிக்க முடியும்.
* வெளியே செல்லும்போது, அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். அவசியமான சான்றுகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
* படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு PSW (Post Study Work) விசா தருகிறார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு குடியுரிமை வழங்கும் நாடுகளும் உண்டு. இப்போது அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் விசா விஷயத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி வெளிநாட்டு படிப்புகளை தேர்வு செய்வதற்கான டிப்ஸ் ...
* ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகளுக்குச் செல்ல, ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
* வெளிநாடுகளில் இளநிலை படிப்பை படித்து முடிக்க குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும். மருத்துவம் மற்றும் புதுமையாக அறிமுகமாகும் படிப்புகளுக்கு இன்னும் கூடுதல் செலவு ஏற்படலாம். எனவே பொருளாதார வசதியையும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
* இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்காக SAT (Scholastic Aptitude Test) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றன. முதுநிலை படிக்கச் செல்லும் மாணவர்கள் Graduate Record Examination தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 110 நாடுகளில் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர GMAT (Graduate Management Admission Test) தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
* வெளிநாட்டில் இளநிலை படிப்புகளை விட. முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை படிக்கச் செல்வது நல்லது. ஏனெனில் இளநிலை படிப்புக்கு நீண்டகாலம் அங்கு தங்க வேண்டியிருக்கும். அது அதிக செலவு வைக்கும். முதுநிலைப் படிப்புகள் பல 2 ஆண்டுகளில் முடிந்துவிடும். சில ஆராய்ச்சி படிப்புகளும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். எனவே இவற்றைத் தேர்வு செய்வது குறைந்த செலவில், நல்ல பயன் தருவதாக அமையும்.
* படிப்புகளுக்காக வெளிநாடு செல்வதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் எங்கே எதைப் படிப்பது என்பதில் தெளிவு தேவை. உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்கத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம். ‘மைனிங்‘ சார்ந்த படிப்புகளை அங்கே படிக்கலாம். கனடா மற்றும் ஜப்பான் நாடுகளில் முதுமையை எட்டுபவர்கள் அதிகரித்துக் கொண்ட செல்கிறார்கள். எனவே நர்சிங், ஹெல்த்கேர் சயின்ஸ் படிப்பவர்களுக்கு இங்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். சுற்றுலா, ஓட்டல்மேனேஜ்மென்ட், கேட்டரிங் மற்றும் மேலாண்மைப் படிப்புகள் பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
* துபாய், சிங்கப்பூர், போலந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, பின்லாந்து, நார்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் நல்ல கல்விச் சூழல் நிலவுகிறது. அங்கும் உங்களுக்கு விருப்பமான கல்வியைத் தேர்வு செய்யலாம்.
* அதுபோலவே எதிர்கால தொழில்நுட்பங்களாக வளர்ந்து கொண்டிருக்கும் நானோ அறிவியல் தொழில்நுட்பம், செயற்கை அறிவு நுட்பம், ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கணினி நுட்பம், கணினி மொழி- அப்ளிகேசன்கள் பற்றிய படிப்புகள், விண்வெளி மற்றும் ஏலியன்களைப் பற்றிய படிப்பு உள்ளிட்ட புதுமையான படிப்புகளை அமெரிக்கா, ரஷியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தேர்வு செய்து படித்து பயன்பெறலாம்!

Related Tags :
Next Story