நிலத்தடி ‘பிரிஜ்’


நிலத்தடி ‘பிரிஜ்’
x
தினத்தந்தி 27 March 2018 1:52 PM IST (Updated: 27 March 2018 1:52 PM IST)
t-max-icont-min-icon

பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் குளிர்ப்பதனப் பெட்டிகளுக்கு மாற்றாக, பெரிய அளவில் நிலத்தடியில் பொருட்களை பதப்படுத்தி வைக்கும் ‘கிரவுண்ட் பிரிஜ்’ (நிலத்தடி குளிர்ப்பதன பெட்டி) நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கனடாவைச் சேர்ந்த புளோரிஸ் ஸ்கூன்டர்பீக் நிறுவனம் இந்த புதிய மாதிரி பிரிஜ்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

20 பிரிஜ்களில் வைக்கக்கூடிய பொருட்களை, இந்த பிரமாண்ட நிலத்தடி பிரிஜ்ஜில் பாதுகாக்க முடியும். ஆண்டு முழுதும் 7 டிகிரி முதல் 12 டிகிரி வெப்பநிலையில் காய்கறி மற்றும் பொருட்களை பராமரிக்க முடியும். சொல்லப் போனால் இது நிலத்தடியில் இருக்கும் ரகசிய சமையல் அறைபோல தோற்றமளிக்கும்.

பாரம்பறிய முறையில் இந்த அறையில் காய்கறிகளை பராமரிக்கலாம். வழக்கமான பிரிஜ்கள், மின்சாரத்தை குடித்து செலவு வைப்பதுடன் சுற்றுப்புறத்தையும் மாசுபடுத்தி விடுகிறது. ஆனால் இது சூரியசக்தி மற்றும் காந்தசக்தியை பயன்படுத்தி வெப்பத்தை குளிர்ச்சியாக மாற்றுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ‘புவிவெப்பமாதல் பிரச்சினைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் ஏ.சி., பிரிஜ் பயன்பாட்டிற்கு சிறந்த மாற்றுவழி தங்களுடைய குளிர்ப்பதன முறை’ என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

Next Story