கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பயணிகள் அவதி


கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 28 March 2018 4:45 AM IST (Updated: 28 March 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு புதிய பஸ்நிலைய கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ்நிலையத்தில் நகராட்சி கட்டுபாட்டில் பொதுகழிவறை மற்றும் குளியலறை போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டண கழிவறையில் நிரம்பும் கழிவுநீர் அகற்றப்படாததால் நிரம்பி கழிவறையின் பின் புறத்தில் உள்ள திறந்தவெளியில் பஸ்நிலையத்திற்குள் செல்கிறது. கழிவறையை மேற்பார்வையிடக்கூடியவரும் கழிவுநீரை தொட்டியில் இருந்து எடுத்து திறந்தவெளியில் விட்டு விடுகிறார்.

அந்த கழிவுநீரில் புழுக்கள் அதிக அளவில் கிடக்கிறது. பன்றிகளும் கழிவுநீரில் திரிகின்றன.

இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இந்த சுகாதார சீர்கேடு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார்அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படுகிறது. கழிவறையில் இருந்து சேரக்கூடிய கழிவுநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்பதே அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story