சுற்றுச்சுவர் குறித்த பிரச்சினை: சந்தையூர் கிராமத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு
சந்தையூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் குறித்த பிரச்சினை பற்றி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பேரையூர்,
சந்தையூர் இந்திரா காலனியில் உள்ள கோவில் சுற்றுச்சுவர் சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஒரு சமூகத்தினர் சுற்றுச்சுவரை இடிக்க வேண்டும் என்று கடந்த 58 நாட்களாக மலைப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு சமூகத்தினர் தாங்கள் கட்டிய கோவில் சுற்றுச்சுவரை இடிக்க கூடாது என்றும்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவில் அருகே உள்ள வீதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மதியம் கலெக்டர் வீரராகவராவ் சந்தையூர் இந்திரா காலனிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அவர் அங்குள்ள கோவில் சுற்றுச்சுவரை பார்வையிட்டார். மேலும் அந்த பகுதியில் போராட்டத்தில் இருந்தவர்களிடம் பேசினார். பின்னர் அவர் மலைப்பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர்களிடமும் நேரில் சென்று பேசினார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சமாதானக்கூட்டத்திற்கு இருதரப்பு முக்கியமானவர்களையும், சந்தையூர் முக்கிய பிரமுகர்களையும் அழைத்து வருமாறு வருவாய் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story