டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை


டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 March 2018 3:00 AM IST (Updated: 28 March 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாச்சேத்தி அருகே டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிவகங்கை,

மதுரையில் இருந்து தொண்டிக்கு கடந்த 12.12.2014 அன்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் திருப்பாச்சேத்தியை அடுத்த ஆவரங்காட்டை சேர்ந்த மகாராஜா(வயது 30) என்பவர் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளார்.

இதனால் பஸ் கண்டக்டர் சேதுராமச்சந்திரன்(53) படிக்கட்டில் பயணம் செய்யாமல் இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகாராஜா, சேதுராமச்சந்திரனை வாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்த டிரைவர் பொன்னுச்சாமி பஸ்சை நிறுத்திவிட்டு தடுக்க முயன்றார். அப்போது கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கிவிட்டு மகாராஜா தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பூவந்தி போலீசார் வழக்குப்பதிந்து மகாராஜாவை கைதுசெய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு சிவகங்கை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம்சாட்டப்பட்ட மகாராஜாவிற்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,250 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story