ஆலங்குளம் அருகே, தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பள்ளிக்கூட மாணவியிடம் சில்மிஷம்; நகைக்கடை உரிமையாளர் கைது


ஆலங்குளம் அருகே, தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பள்ளிக்கூட மாணவியிடம் சில்மிஷம்; நகைக்கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 28 March 2018 2:30 AM IST (Updated: 28 March 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே, தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பள்ளிக்கூட மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே, தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பள்ளிக்கூட மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நகைக்கடை உரிமையாளர்


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை பாவேந்தர் நகரை சேர்ந்தவர் அனுமந்திரம் (வயது 60). ஊத்துமலையில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சண்முகநல்லூர் விலக்கு அருகே வந்த போது, அங்கு ஊத்துமலையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பஸ்சுக்காக காத்து நின்றார்.பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வரும் அந்த மாணவி, விடுமுறையில் ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அந்த மாணவியை பார்த்த அனுமந்திரம், எந்த ஊருக்கு செல்ல வேண்டும்? என கேட்டுள்ளார். அதற்கு மாணவி, ஊத்துமலை என்றதும், நான் அங்குதான் செல்கிறேன். எனது மோட்டார்சைக்கிளில் ஏறிக் கொள். உன்னை அங்கு இறக்கி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

மாணவியிடம் சில்மிஷம்

இதையடுத்து அந்த மாணவியும், அனுமந்திரத்தின் மோட்டார்சைக்கிளில் ஏறியுள்ளார். ஊத்துமலைக்கு முன்னதாக கீழக்கலங்கல் வந்த போது அங்குள்ள ஒரு தோட்டம் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த மாணவியை, தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று, அவளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார். அவளது சத்தம் கேட்டதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தோட்டத்துக்குள் ஓடி வந்தனர். அங்கு நின்ற அனுமந்திரத்தை மடக்கி பிடித்து ஊத்துமலை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவியிடம் அனுமந்திரம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் வழக்குப்பதிவு செய்து அனுமந்திரத்தை கைது செய்தார்.

பின்னர் அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத் தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story