ரூ.200 மட்டுமே கொடுத்தால் போதும்: அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் வாங்க கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை


ரூ.200 மட்டுமே கொடுத்தால் போதும்: அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் வாங்க கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 2:15 AM IST (Updated: 28 March 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் வாங்க ரூ.200 மட்டுமே கொடுத்தால் போதும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.

நெல்லை,

அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் வாங்க ரூ.200 மட்டுமே கொடுத்தால் போதும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.

செட்டாப் பாக்ஸ்

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில் தற்போது செட்டாப் பாக்ஸ் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. இணைப்பு பெறும் ஒரு வீட்டுக்கு அரசு இணைப்பு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என்று ஏற்கனவே அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவித்து இருந்தது.

ஆனால் தற்போது நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செட்டாப் பாக்ஸ் பொருத்துவதற்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடும் நடவடிக்கை


இதுகுறித்து நெல்லை மாவட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“தமிழக அரசு சார்பில் செட்டாப் பாக்ஸ் ரூ.200 வழங்கப்படுகிறது. 2 வகையாக பேக்கேஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ரூ.150 செலுத்துபவர்களுக்கு 200 சேனல்கள் வரை தெரியும், ரூ.210 செலுத்துபவர்களுக்கு 300 சேனல்கள் வரை தெரியும்.

இதுவரை நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் பேருக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்வதாக புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் கூடுதல் கட்டணம் கொடுத்து செட்டாப் பாக்ஸ் வாங்க வேண்டாம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story