நாட்டுப்படகு-விசைப்படகு மீனவர்களிடம் சமாதான கருத்து கேட்பு கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது
கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே சமாதான கருத்து கேட்பு கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
திருச்செந்தூர்,
கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே சமாதான கருத்து கேட்பு கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
சமாதான கூட்டம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 264 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் தங்கு கடலுக்கு அனுமதி கேட்டு, கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் இடையே சமாதான கருத்து கேட்பு கூட்டம் நேற்று மாலையில் நடந்தது.
நாட்டுப்படகு மீனவர்கள்
தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், உதவி இயக்குனர்கள் சிவராமச்சந்திரன், விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதலில் நாட்டுப்படகு மீனவர்களிடம் அதிகாரிகள் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது அந்த மீனவர்கள் கூறுகையில், கடல்சார் ஒழுங்குமுறை சட்டம் 1983-ன்படி விசைப்படகு மீனவர்கள் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மட்டுமே கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். பதிவு பெறாத விசைப்படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்று கூறினர்.
பின்னர் விசைப்படகு மீனவர்களிடம் அதிகாரிகள் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது அந்த மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே கடந்த 7 மாதங்களாக விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாததால் வறுமையில் வாடுகிறோம். மீன்பிடி தடைக்காலத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. எனவே குறைந்த நாட்களிலாவது விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களும் அதிக சக்தி கொண்ட என்ஜின் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகின்றனர். அவர்களையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினர்.
நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களின் கருத்துகள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story