தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பயிர் காப்பீடு தொகையை முறையாக வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பயிர் காப்பீடு தொகையை முறையாக வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 March 2018 3:00 AM IST (Updated: 28 March 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, பயிர் காப்பீடு தொகையை முறையாக வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி, பயிர் காப்பீடு தொகையை முறையாக வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாகவும், கிராமத்துக்கு கிராமம் பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் வித்தியாசம் இருப்பதாகவும், அனைவருக்கும் முறையாக பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) முத்துஎழில் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் அனைவருக்கும் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி கூறும் போது, ‘மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் மாதம் 20-ந் தேதிக்குள் காப்பீடு தொகையை வழங்காவிட்டால், விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினார்.

Next Story