ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடியில், வருகிற 24-ந் தேதி நடக்கிறது


ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடியில், வருகிற 24-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 28 March 2018 2:15 AM IST (Updated: 28 March 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

குறைதீர்க்கும் நாள்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும் போது மரணமடைந்தவர்கள் குடும்பத்தினர் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தூத் துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் 24-ந்தேதி நடக்க உள்ளது.

விண்ணப்பம்

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, அவர்கள் கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையில் உள்ளது என்பன போன்ற விவரங்களுடன், வருகிற 10-ந்தேதிக்குள் 2 பிரதிகளில் விண்ணப்பித்து, ‘மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படாது.

மேலும், விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் வருகிற ஏப்ரல் 24-ந்தேதியன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story