பெங்களூருவில் வாலிபரை கடத்தி பணம் பறித்ததாக 4 பேர் கைது
பெங்களூருவில், வாலிபரை கடத்தி பணம் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், வாலிபரை கடத்தி பணம் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தி பணம் பறிப்பு
பெங்களூரு பொம்மனஹள்ளியில் உள்ள கோடிசிக்கனஹள்ளி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பிரதாப்(வயது 22). இவர் கொத்தனூர் தின்னே பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுவிட்டு பணம் எடுத்துக்கொண்டு திரும்பினார். அப்போது, காரில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்தி சென்றனர். பேகூரு கொப்பா ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவரை மர்மநபர்கள் சிறை வைத்து அடித்து உதைத்தனர். அவர் வைத்திருந்த செல்போன், ரூ.80 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர். பிரதாப்பிடம் இருந்து ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணையும் மர்மநபர்கள் கேட்டு அறிந்து கொண்டனர்.
பின்னர், அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.95 ஆயிரம் எடுத்த மர்மநபர்கள், ஏ.டி.எம். கார்டை தேய்த்து நகைக்கடையில் ரூ.1½ லட்சத்துக்கு நகைகள் வாங்கி கொண்டனர். மேலும், ரூ.25 ஆயிரத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்ட மர்மநபர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கக் கூடாது, மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரதாப்பை மிரட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்து பிரதாப் கோணனகுண்டே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கடத்தல்காரர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடத்தல் தொடர்பாக பெங்களூரு பி.ஜி. ரோட்டில் கெம்பத்தஹள்ளியை சேர்ந்த மது(32), சுரபிநகரை சேர்ந்த மஞ்சுநாத் (29), தொட்டகல்லசந்திராவை சேர்ந்த ஆனந்த்(26), சின்னய்யனபாளையாவை சேர்ந்த நரேந்திரா(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.30 லட்சம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டு, 2 தங்க சங்கிலிகள், மோதிரம், 4 செல்போன்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story