தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் சிக்பள்ளாப்பூரில் நடக்க இருந்த பால் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா ரத்து
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், சிக்பள்ளாப்பூரில் நடக்க இருந்த பால் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
கோலார் தங்கவயல்,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், சிக்பள்ளாப்பூரில் நடக்க இருந்த பால் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்-மந்திரி சித்தராமையா, சுதாகர் ரெட்டி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான காரில் பெங்களூருவுக்கு திரும்பி சென்றார்.
தொழிற்சாலை திறப்பு விழா ரத்து
சிக்பள்ளாப்பூர் நந்தி கிராஸ் பகுதியில் கோலார்-சிக்பள்ளாப்பூர் பால் கூட்டுறவு சங்கம் (கோமுல்) சார்பில் 15 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பால் உற்பத்தி தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை ரூ.165 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற இருந்தது. இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை 11.05 மணி அளவில் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து கார் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு வந்தார். அவருக்கு முன்னதாக மந்திரிகள் ராமலிங்கரெட்டி, ரமேஷ்குமார் ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், பால் உற்பத்தி தொழிற்சாலையின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்தபோது, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், பால் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
இதனால் சித்தராமையா மற்றும் மந்திரிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். மேலும் சித்தராமையாவும், மந்திரிகளும் அரசு கார்களில் தான் பெங்களூருவில் இருந்து சிக்பள்ளாப்பூருக்கு வந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், அவர்களிடம் இருந்து அரசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். பின்னர் சித்தராமையா மற்றும் மந்திரிகள் ராமலிங்கரெட்டி, ரமேஷ்குமார் ஆகியோர் சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சுதாகர் ரெட்டிக்கு சொந்தமான கார்களில் பெங்களூருவுக்கு திரும்பி சென்றனர்.
ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பின்னடைவு
முன்னதாக, முதல்-மந்திரி சித்தராமையா முன்னிலையில் சிக்பள்ளாப்பூர் மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் கே.வி.நாகராஜ், காங்கிரசில் இணைந்தார். இதுதொடர்பாக கே.வி.நாகராஜ் கூறுகையில், நான் 25 ஆண்டுகளாக ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து வருகிறேன். எனக்கு மேல்சபை உறுப்பினர் பதவி கொடுப்பதாக குமாரசாமி கூறினார். ஆனால் அந்த பதவியை எனக்கு கொடுக்கவில்லை. மேலும், சிக்பள்ளாப்பூர் தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியில் எந்த மதிப்பும் இல்லை. இதனால் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன் என்றார்.
தேவேகவுடா, குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கே.வி.நாகராஜ். இவர் தற்போது கட்சியில் இருந்து விலகி இருப்பது, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story