கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மந்திரி வினோத் தாவ்டே எச்சரிக்கை

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மந்திரி வினோத் தாவ்டே எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 5:00 AM IST (Updated: 28 March 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி வினோத் தாவ்டே கூறினார்.

மும்பை,

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி வினோத் தாவ்டே கூறினார்.

குற்றச்சாட்டு

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பல தனியார் பள்ளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை சேர்க்க மறுப்பதாகவும், அந்த பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கல்வி நிதி பாக்கி இருப்பதாகவும் சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார்.

இதற்கு கல்வி மந்திரி வினோத் தாவ்டே பதிலளித்து கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

மராட்டியத்தில் எந்த ஒரு ஏழை மாணவர்களுக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி மறுக்கப்பட கூடாது. இந்த சட்டத்தின் கீழ் மாணவர்களுக்காக வழங்கப்பட வேண்டிய நிதி பிரச்சினையை தனியார் பள்ளிகளுடன் பேசி அரசு தீர்த்து கொள்ளும்.

அதே நேரத்தில் கல்வி உரிமை சட்டத்தை சரியாக அமல்படுத்தாமல், ஏழை மாணவர்களை சேர்த்து கொள்ள மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story