நவிமும்பை- மும்பை இடையே படகு சேவை அதிகாரிகள் ஆய்வு
நவிமும்பை - மும்பை இடையே படகு சேவை தொடங்குவது தொடர்பாக மாநகராட்சி, கடல்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மும்பை,

படகு போக்குவரத்து திட்டம்
நவிமும்பை - மும்பை இடையே படகு போக்குவரத்தை தொடங்க நவிமும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து துறை இந்த படகு சேவையை இயக்க உள்ளது. இதில் தென்மும்பையில் உள்ள பாவு சா தக்கா - பேலாப்பூர் ரெட்டி பந்தர், பேலாப்பூர் - உரன் ஆகிய தடங்களில் படகுகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடல்வாரியம் (எம்.எம்.பி.) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆய்வு செய்தனர்
இந்தநிலையில் இந்த திட்டம் குறித்து நவிமும்பை மாநகராட்சி மற்றும் கடல்வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதற்காக நவிமும்பை மாநகராட்சி கமிஷனர் ராமசாமி, கடல்வாரிய தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் படகு மூலம் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து பேலாப்பூர் சரோவர் விகார் ஜெட்டி வரை சென்றனர். ஆய்விற்கு பிறகு மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ விரைவில் இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தனியார் நிறுவனம் நியமிக்கப்படும் ” என்றார்.

Related Tags :
Next Story