2 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளால் உருவான அம்மன் ஓவியம்


2 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளால் உருவான அம்மன் ஓவியம்
x
தினத்தந்தி 28 March 2018 4:30 AM IST (Updated: 28 March 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளால் அம்மன் ஓவியம் உருவாக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி,

உலக சாதனை நிகழ்த்துவதற்காக திருச்சி வாசவி மகாலில் வாசவி வனிதா கிளப் என்ற அமைப்பமேம்பாட்டிற்காக விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த 300 பெண்கள் இதில் பங்கேற்று 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை தயார் செய்தனர். காலையில் தொடங்கிய இந்த பணியானது இரவு வரை நடந்தது.

நேற்று காலை செம்மண்ணால் தயாரிக்கப்பட்ட விதை பந்துகளுக்கு மஞ்சள், சிகப்பு, பச்சை, வெள்ளை, கருப்பு நிற வர்ணங்கள் பூசப்பட்டது. பின்னர் அந்த விதைப்பந்துகள் தலா 7 மீட்டர் நீள அகலத்தில் 49 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உருவ ஓவியமாக அடுக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி சுஜாதா மற்றும் உலக சாதனை நிகழ்ச்சிகளுக்கான நடுவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த விதை பந்துகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story