பார் கவுன்சில் தேர்தல்: வக்கீல்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர் 10 இடங்களில் ஓட்டுப்பதிவு
தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. வக்கீல்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
நெல்லை,

பார் கவுன்சில் தேர்தல்
தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. 25 நிர்வாகிகள் பதவிக்கு 192 பேர் போட்டியிடுகிறார்கள்.
இந்த பார்கவுன்சில் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, அம்பை, ஆலங்குளம், சேரன்மாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய 10 இடங்களில் கோர்ட்டு வளாகங்களில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. அனைத்து இடங்களிலும் வக்கீல்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
நெல்லை
நெல்லை கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சேம்பரில் நேற்று பார்கவுன்சில் நிர்வாகிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. நெல்லை வக்கீல் சங்கத்தில் 1,109 பேர் உள்ளனர். இந்த வக்கீல்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஓட்டுப்பெட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லையில் தேர்தல் அதிகாரியாக நீதிபதி ஹேமானந்தகுமாரும், ஓய்வு பெற்ற நீதிபதி ஞானையா உதவி தேர்தல் அதிகாரிகள் வக்கீல்கள் ஜாபர்அலி, கபிரியல்ராஜ்ஆகியோர் இருந்து தேர்தலை நடத்தினார்கள். பார் கவுன்சில் தேர்தலையொட்டி நெல்லை கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அம்பை
அம்பையில் தற்போது இயங்கி வரும் சப்-கோர்்ட்டு வளாகத்தில் நேற்று தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மூத்த வக்கீல் பிரதாபன் தேர்தல் அதிகாரியாகவும், வக்கீல்கள் ரமேஷ், சரவணன், சத்யராஜ் ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் செயல்பட்டனர். இதில், 150-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இத்தேர்தலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story