திருச்செந்தூரில் வாடகை பாக்கி செலுத்தாத இரு சக்கர வாகன காப்பகம்- 6 கடைகளுக்கு சீல் வைப்பு
திருச்செந்தூரில் வாடகை பாக்கி செலுத்தாத இரு சக்கர வாகன காப்பகம் மற்றும் 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் வாடகை பாக்கி செலுத்தாத இரு சக்கர வாகன காப்பகம் மற்றும் 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வாடகை பாக்கி
திருச்செந்தூரில் நகர பஞ்சாயத்துக்கு சொந்தமாக பகத்சிங் பஸ் நிலைய வளாகத்தில் 37 கடைகள் மற்றும் இரு சக்கர வாகன காப்பகமும், பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் 36 கடைகளும், நகர பஞ்சாயத்து அலுவலகம் எதிரே உள்ள வணிக வளாகத்தில் 6 கடைகளும், சன்னதி தெரு தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் 8 கடைகளும் உள்ளன. இந்த கடைகளை குத்தகை எடுத்தவர்கள் பல ஆண்டுகளாக ரூ.63 லட்சம் வரையிலும் வாடகை பாக்கி வைத்து இருந்தனர்.
இதையடுத்து அந்த கடைகளின் குத்தகைதாரர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நகர பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. இதுகுறித்து அந்த கடைகளின் முன்பு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது. தொடர்ந்து பெரும்பாலானவர்கள் வாடகை பாக்கியை செலுத்தினர். எனினும் சிலர் வாடகை பாக்கியை செலுத்தவில்லை.
கடைகளுக்கு சீல் வைப்பு
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகன காப்பகத்தை குத்தகைக்கு எடுத்தவர் செல்வராஜ், ரூ.11 லட்சத்து 87 ஆயிரத்து 696 வாடகை பாக்கி வைத்து இருந்தார். மேலும் பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் கடை நடத்தி வந்த சுகுமார், செசாரீஸ், திலீபன், கருணாகரன், நசரேன் ஆகியோரும், நகர பஞ்சாயத்து அலுவலகம் எதிரே கடை நடத்தி வந்த சதாசிவம் என்பவரும் வாடகை பாக்கி செலுத்தவில்லை.எனவே வாடகை பாக்கி செலுத்தாத இருசக்கர வாகன காப்பகம் மற்றும் 6 கடைகளுக்கும் நேற்று மாலையில் தாசில்தார் அழகர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மனோரஞ்சிதம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story