ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் புதிய தேர்கள் வெள்ளோட்டம்


ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் புதிய தேர்கள் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 29 March 2018 2:00 AM IST (Updated: 29 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் புதிய தேர்கள் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

கடையம்,

ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் புதிய தேர்கள் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

சிவசைலநாதர் கோவில்


ஆழ்வார்குறிச்சி சிவசைலத்தில் அமைந்துள்ள பரமகல்யாணி அம்மன் உடனுறை சிவசைலநாதர் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த தேர்கள் இருந்தன. இந்த தேர்கள் பழுதடைந்ததை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தேர்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

சென்னை அமால்காமேசன் குழுமங்களின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு புதிதாக தேர்கள் செய்து தர முன்வருவதாக தெரிவித்ததையடுத்து 2017-ம் ஆண்டு மே மாதத்தில் புதிய தேர்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. தேர்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையடுத்து நேற்று தேர்கள் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

புதிய தேர்கள் வெள்ளோட்டம்


தொடர்ந்து நேற்று காலை தேர்கள் வெள்ளோட்டம் தொடங்கியது. இதில் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பரம்பு, செட்டிகுளம், கல்யாணிபுரம், சிவசைலம், பாப்பான்குளம், பொட்டல்புதூர், ரவணசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, நிர்வாக அலுவலர் ராஜேந்திரகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story