விஷவாயு தாக்கியதில் பலி தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
ஆம்பூரில் விஷவாயு தாக்கி தந்தை இறந்த துக்கத்திலும் அவரது மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு எழுத வந்த மாணவிக்கு ஆசிரியைகளும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே பெரியவரிகம் ஊராட்சி பகுதியில் குடியாத்தம் - வாணியம்பாடி சாலையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஆம்பூர் அழகாபுரி பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் (வயது 46), பந்தேரபள்ளியை சேர்ந்த சின்னதம்பி மகன் கோதண்டன் (31), கீழ்மிட்டாளம் பாஸ்கர் மகன் செல்வம் (25) ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விஷவாயு தாக்கி இறந்த ரங்கநாதனுக்கு சசிரேகா என்ற மனைவியும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். சுவேதா ஆம்பூரில் உள்ள பெத்தேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.
பள்ளியில் நன்றாக படிக்கும் சுவேதா தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்த நிலையில் அவரது தந்தை விஷவாயு தாக்கி இறந்த தகவலை கேள்விப்பட்டு கதறி அழுதார். மேலும் அவருக்கு நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் ஏற்பட்டது. விடிந்தால் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையில் அவருக்கு சக மாணவிகளும், உறவினர்களும் ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் நேற்று பள்ளியின் ஆசிரியைகள் சுவேதாவின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறி, தைரியம் கொடுத்து தேர்வு எழுதும்படி கூறினர். தந்தை இறந்த துக்கத்துடன் தேர்வு எழுதும் மையத்திற்கு தனது சித்தியுடன் அழுது கொண்டே சென்றார். தேர்வு தொடங்கும் முன் சுவேதாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சுவேதா தேர்வு எழுதினார். அதுவரை அவரது சித்தி நிர்மலா காத்திருந்தார். தேர்வு எழுதி முடித்து வெளியே வரும்போது மாணவி அழுது கொண்டே வந்தார். இதனால் சக மாணவிகளும், பள்ளியின் ஆசிரியைகளும் மாணவிக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றதால், சக மாணவிகளும் கண்ணீர்விட ஆரம்பித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story