கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் நகராட்சி உயர்நிலை அலுவலர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக தலைவராக இருந்த விஜயகுமாரின் ஆதரவாளர்களும், நகராட்சி உயர்நிலை அலுவலர் சங்கத்தினை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் ஆதரவாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அழகர்சாமியின் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு சென்று தகவல் கேட்ட போது எந்த தகவலும் தெரிவிக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதம் எழுந்து வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அழகர்சாமியின் ஆதரவாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், விஜயகுமாரின் ஆதரவாளர்களின் வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு வரவில்லை. இதனைக் கண்டித்து கூட்டுறவு சங்கத்தின் முன்பாக அழகர்சாமியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். சம்பவம் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

Related Tags :
Next Story