நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதுரை, தேனி மாவட்டங்களில் வைகோ 10 நாள் நடைபயணம்
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனி-மதுரை மாவட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதுரையில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தேனி,
தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதலே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்காக மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வைகோ வழக்கு தொடர்ந்து இடைக்கால தடைபெற்றார்.
தற்போது மீண்டும் இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மதுரை, தேனி மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
மதுரையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபயணத்தை தொடங்கும் வைகோ, கம்பத்தில் வருகிற 9-ந்தேதி நடைபயணத்தை நிறைவு செய்கிறார். 10 நாட்கள் அவர் தொடர்ந்து இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். வைகோவின் நடைபயணத்தை மதுரையில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
வைகோவின் நடைபயணம் விவரம் வருமாறு:-
நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மதுரை தெப்பக்குளத்தில் நடைபயணம் தொடங்குகிறார். மேலமாசிவீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரா கோட்ஸ் மேம்பாலம், காளவாசல் சந்திப்பு, தேனி சாலை, அங்கயற்கண்ணி தோரணவாயில், அச்சம்பத்து, நாகமலைபுதுக்கோட்டை வழியாக செக்கானூரணிக்கு வருகிறார். அங்கு இரவு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
1-ந்தேதி செக்கானூரணியில் தொடங்கி, கருமாத்தூர், செல்லம்பட்டி மெயின்ரோடு, வாலாந்தூர், குப்பணம்பட்டி தி.விலக்கு பகுதிக்கு சென்று விட்டு, உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 2-ந்தேதி உசிலம்பட்டியில் இருந்து புறப்பட்டு தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, கணவாய் வழியாக தேனி மாவட்டத்துக்குள் நுழைகிறார். ராஜகோபாலன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி வழியாக வந்து, ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
3-ந்தேதி ஆண்டிப்பட்டி, ஜக்கம்பட்டி, க.விலக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக வந்து, தேனியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 4-ந்தேதி பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி, போடேந்திரபுரம், சடையால்பட்டி விலக்கு, காமராஜபுரம், பத்ரகாளிபுரம், விசுவாசபுரம், மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம், திருமலாபுரம் பகுதிகளுக்கு சென்று விட்டு போடியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
5-ந்தேதி போடி, பி.ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், கோணாம்பட்டி விலக்கு, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை பகுதிகளுக்கும், 6-ந்தேதி சொக்கநாதபுரம், டி.ரெங்கநாதபுரம், மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைச்சேரி பகுதிகளுக்கும், 7-ந்தேதி கீழசிந்தலைச்சேரி, புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, அம்பாசமுத்திரம், கோட்டைமேடு, உத்தமபாளையம், கோகிலாபுரம், ஆனைமலையான்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளுக்கும் செல்கிறார்.
8-ந்தேதி ராயப்பன்பட்டியில் புறப்பட்டு அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, கூடலூர் பிரிவு வழியாக சென்று கூடலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 9-ந்தேதி கூடலூரில் இருந்து புறப்பட்டு கம்பம் வருகிறார். கம்பத்தில் முக்கிய வீதிகளில் நடந்து செல்கிறார். இரவு கம்பத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.
மதுரையில் நடக்கும் தொடக்க நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தினர் செய்துள்ளனர்.

Related Tags :
Next Story