தங்க புதையலுக்காக தொழிலாளியை நரபலி கொடுக்க முயற்சி தோட்ட உரிமையாளர் கைது
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் தங்க புதையலுக்காக தொழிலாளியை நரபலி கொடுக்க முயன்ற தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மந்திரவாதி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 52). இவருக்கு அத்திப்பள்ளி அருகே உள்ள எடவனஹள்ளி கிராமத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அத்திப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரப்பாவை சந்தித்த மந்திரவாதி ஒருவர், ஆண் ஒருவரை உயிரோடு புதைத்து நரபலி கொடுத்தால் தங்க புதையல் கிடைக்கும் என கூறினார். இதை நம்பிய சங்கரப்பா அதற்கான திட்டத்தை தீட்டினார்.
அதன்படி கடந்த 26-ந் தேதி இரவு தனது தோட்ட கொட்டகையில் 8 அடி ஆழத்தில் குழி தோண்டினார். இதன் பிறகு மந்திரவாதி, 2 பேருடன் அங்கு சென்றார். அவர்கள் கூலித்தொழிலாளி நாகராஜை அங்கு வரவழைத்து அவரை குழிக்குள் நரபலி கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக தோட்டத்தில் வேலை உள்ளதாக நாகராஜை சங்கரப்பா அழைத்தார். நாகராஜ் அங்கு சென்றபோது பூஜைகள் நடந்தன. மேலும் மண்டை ஓடு, எலுமிச்சை பழம், பூக்கள் இருந்ததையும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததையும் கண்ட நாகராஜ் சந்தேகம் அடைந்தார். அப்போது சங்கரப்பா, நாகராஜை நீ குளித்து விட்டு இங்கே வா என்று கூறினார். இதைக்கேட்ட நாகராஜ் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் அவர் இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சங்கரப்பாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சங்கரப்பாவும், மந்திரவாதியும் சேர்ந்து தங்க புதையலுக்காக நாகராஜை நரபலி கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக மந்திரவாதியையும், மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story