ஈரோடு மாவட்டத்தில் மலையாளி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், அந்தியூர் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் மலையாளி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அந்தியூர் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தியூர்,
அந்தியூர் தொகுதி இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மலையாளி இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் உறவினர்கள் சேலத்தில் உள்ளனர். இவர்களுக்கு பழங்குடி இன வகுப்பினர் என்று சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலையாளி இன மக்கள் பழங்குடியினர் வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனரே தவிர அவர்களுக்கு இன்னும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே இதற்கு சிறப்பு அதிகாரியை நியமித்து விரைவாக பழங்குடியினர் என்ற சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நான் சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசியுள்ளேன்.
பர்கூர்மலை மணியாச்சி ஓடையில் செல்லுகின்ற நீரை, வரட்டுப்பள்ளம் மற்றும் வழுக்குப்பாறை அணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அந்தியூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்தினால் அந்தியூர் மற்றும் பவானி பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டையும், கர்நாடகா மாநிலத்தையும் இணைக்கும் சாலையான செல்லம்பாளையம்-கொள்ளேகால் சாலையை அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். மேலும் கெட்டிசமுத்திரம் ரோட்டை அகலப்படுத்தி, பாலம் அமைக்கவும் நடப்பு ஆண்டில் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூர் தொகுதியில் பல இடங்களில் நீர்வழி புறம்போக்கு, ஓடை புறம்போக்கு உள்ளிட்ட எந்த புறம்போக்கு என்று கூட தெரியாமல் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகிறார் கள். இவர்கள் வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவால் வருவாய்துறை, பொதுப்பணித்துறையின் மூலமாக இவர்களுக்கு நீர்வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வீடுகளை அப்புறப்படுத்தும் சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலமாக தக்க இடம் ஏற்பாடு செய்து பட்டா, வீடு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதுவரை கோர்ட்டு உத்தரவால் வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.
பர்கூர் மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், போலீஸ் நிலையம், வனச்சரகம், கால்நடை நிலையம் மற்றும் 2 கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரியும் ஆசிரியர் உள்பட அரசு ஊழியர்கள் கூடுதல் செலவினங்களோடு பணிக்கு வந்து செல்கிறார்கள். எனவே இவர்களின் நலன்கருதி கூடுதல் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் மலைப்படி மற்றும் குளிர்காலப்படி வழங்க வேண்டும். அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சியும், சின்னதம்பிபாளையம் ஊராட்சியும் சேர்த்து ஒரே வருவாய் கிராமமாக செயல்பட்டு வருகிறது. மேற்படி பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ளதால் 2-க்கும் தனித்தனி வருவாய் கிராமம் அமைத்துத்தர வேண்டும்.
இவ்வாறு இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story