மாவட்ட பொறுப்பு மந்திரிகளுடன் சித்தராமையா தீவிர ஆலோசனை யாருக்கு டிக்கெட் வழங்கலாம் என்ற விவரங்களை கேட்டு பெற்றார்
மாவட்ட பொறுப்பு மந்திரிகளுடன் சித்தராமையா தீவிர ஆலோசனை நடத்தினார். யாருக்கு டிக்கெட் வழங்கலாம் என்ற விவரங்களை கேட்டு பெற்றார்.
பெங்களூரு,

தனித்தனியாக அழைத்து...
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தலுக்கு தயாராகும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாவட்டமாக பொறுப்பு மந்திரிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை தனித்தனியாக அழைத்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். உடுப்பி பொறுப்பு மந்திரி பிரமோத் மத்வராஜ், ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி ஏ.மஞ்சு, சிக்பள்ளாப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரி ராமலிங்கரெட்டி, பீதர் மாவட்ட பொறுப்பு மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, சித்ரதுர்கா மாவட்ட பொறுப்பு மந்திரி ஆஞ்சனேயா உள்ளிட்ட பல்வேறு மந்திரிகளுடன் சித்தராமையா, பரமேஸ்வர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். காங்கிரசில் யாருக்கு டிக்கெட் வழங்கலாம் என்பது குறித்து அவர்களிடம் விவரங்களை கேட்டு பெற்றனர்.
விதிமுறைகளை மீற வேண்டாம்
இந்த சந்திப்பின்போது பேசிய சித்தராமையா, “தேர்தல் நடத்தை விதிமுறைகளை யாரும் மீற வேண்டாம். அரசு கார்களை பயன்படுத்த வேண்டாம். தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட பொறுப்பு மந்திரிகள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லை. அதனால் தீவிரமாக கட்சி பணியாற்றி நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்“ என்றார்.
இந்த சந்திப்புக்கு பின் பேட்டியளித்த மந்திரி பிரமோத் மத்வராஜ், “நான் பா.ஜனதாவில் சேருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தவறானது. காங்கிரசை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. இதுபற்றி முதல்-மந்திரி என்னிடம் கேட்டார். காங்கிரசில் இருந்து விலக மாட்டேன் என்று கூறினேன். என்னை பற்றி சந்தேகப்பட வேண்டாம் என்றும் நான் கூறினேன். யாரோ சிலர் திட்டமிட்டே வதந்திகளை பரப்புகிறார்கள்“ என்றார்.
வெற்றி வாய்ப்பு
மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறுகையில், “சித்தராமையா மற்றும் பரமேஸ்வர் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளேன். பீதர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். யாருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை எடுத்துக் கூறியுள்ளேன். கட்சி மேலிடம் தான் இறுதி முடிவு எடுக்கும்“ என்றார்.
அதைத்தொடர்ந்து மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி அளிக்கையில், “துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் கொடுக்கும் விஷயத்தில் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். குடும்பத்திற்கு 2 டிக்கெட் என்று விதிமுறை இல்லை. வெற்றி வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. அதனால் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அதுபற்றி முதல்-மந்திரியிடம் கூறி இருக்கிறோம்“ என்றார்.
மகனுக்கு வாய்ப்பு இல்லை
மந்திரி ஆஞ்சனேயா கூறுகையில், “சித்ரதுர்கா மாவட்டத்தில் 6 தொகுதிகள் உள்ளன. இதில் 4 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் தான் உள்ளன. அதில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. மீதமுள்ள 2 தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். மக்களின் பசியை எங்கள் அரசு போக்கியுள்ளது“ என்றார்.
மந்திரி ஏ.மஞ்சு நிருபர்களிடம் பேசுகையில், “அரக்கல்கோடு தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டுள்ளேன். அரசிகெரே, சென்னராயப்பட்டணா தொகுதிகளில் அதிகம் பேர் டிக்கெட் கேட்கிறார்கள். எனது மகனுக்கு டிக்கெட் வழங்குமாறு நான் கேட்கவில்லை. நான் போட்டியிடும் வரை எனது மகனுக்கு வாய்ப்பு இல்லை. எனக்கு வயதாகிவிடவில்லை. ஹாசன் மாவட்டத்தில் யாருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். ஒரு தொகுதிக்கு 2 பெயர்களை பரிந்துரை செய்துள்ளேன். யாருக்கு டிக்கெட் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்“ என்றார்.
வாரிசுகளுக்கு டிக்கெட்
அதைத்தொர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மந்திரி ராமலிங்கரெட்டி, “சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சிந்தாமணியில் மட்டும் சிறிது பிரச்சினை உள்ளது. தந்தை-மகனுக்கு டிக்கெட் கொடுப்பது என்பது புதிய நடைமுறை ஒன்றும் இல்லை. வேறு கட்சிகளிலும் தந்தை-மகனுக்கு டிக்கெட் கொடுக்கும் வழக்கம் உள்ளது. தகுதி இருந்தால் வாரிசுகளுக்கு டிக்கெட் கொடுக்கட்டும். எங்கள் குழந்தைகள் என்ற காரணத்தை வைத்து நாங்கள் டிக்கெட் கேட்கவில்லை. ஜெயநநகர் எனது பழைய தொகுதி. அங்கு எனது மகள் சவுமியா போட்டியிட விரும்புகிறார். அவருக்கு டிக்கெட் கொடுத்தால் மகிழ்ச்சி தான்“ என்றார்.
காலையில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் மாலை வரை நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பு சித்தராமையா முழுமையாக கட்சி பணிகளில் இறங்கியுள்ளார். விரைவாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய அவர் முடிவு எடுத்துள்ளார்.

Related Tags :
Next Story