18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் வேண்டுகோள்


18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 March 2018 3:00 AM IST (Updated: 29 March 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு,

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார்.

18 வயது நிரம்பியவர்கள்

பெங்களூரு மாநகராட்சி, தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகம் மற்றும் சாரண-சாரணியர் இயக்கம் ஆகியவை சார்பில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

18 வயது நிரம்பிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் உரிய வயது சான்றிதழ் மற்றும் வீட்டு முகவரி சான்றிதழுடன் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பம் கொண்ட வி.வி.பேட் எந்திரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடி அமைந்திருக்கும்

மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தல் அதிகாரிகள் வீடு,வீடாக சென்று வாக்களிக்க தேவையான ஆவணங்களை வழங்குவார்கள். அதில் வாக்குச்சாவடி குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும். வாக்காளர்கள் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் போக வேண்டிய தேவை இல்லை. அதற்கு உட்பட்ட பகுதிகளில் தான் வாக்குச்சாவடி அமைந்திருக்கும்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் பேசினார்.

Next Story