நிலம் வாங்கி தருவதாக கூறி துபாயில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.12 கோடி மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி துபாயில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.12 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,

ரூ.12 கோடி மோசடி
துபாய் நாட்டில் வசித்து வருபவர் ராஜேஷ் ராமசந்திரன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவரது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். இவருக்கு, பெங்களூரு மல்லேசுவரம் அருகே வசித்து வரும் ரியல்எஸ்டேட் அதிபரான கணேசுடன் பழக்கம் ஏற்பட்டது. கணேசின் மனைவி ஸ்ரீலதா, ராஜாஜிநகரில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் நிலம் வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று ராஜேசிடம் கணேஷ் ஆசை வார்த்தைகளை கூறினார்.
இதை நம்பிய ராஜேசும் நிலம் வாங்க சம்மதித்ததுடன், கணேசின் வங்கி கணக்குக்கு ரூ.12 கோடியை பல்வேறு தவணைகளில் அனுப்பி இருந்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கணேஷ், தனது மனைவி ஸ்ரீலதாவின் உதவியுடன் பல்வேறு வங்கிகளில் கணக்கு தொடங்கி, அதில் பணத்தை போட்டுள்ளார். இந்த நிலையில், ராஜேசிடம் வாங்கிய பணத்திற்கு நிலம் வாங்கி கொடுக்காமலும், ரூ.12 கோடியை திருப்பி கொடுக்காமலும் கணேசும், அவரது மனைவி ஸ்ரீலதாவும் தலைமறைவாகி விட்டனர்.
தம்பதி கைது
இந்த மோசடி குறித்து இ-மெயில் மூலமாக போலீஸ் கமிஷனர் சுனில்குமாருக்கு ராஜேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி மல்லேசுவரம் போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், தலைமறைவான தம்பதியை மல்லேசுவரம் போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில், குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த ராஜேஷ், ஸ்ரீலதா தம்பதியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு 2 பேரும் மல்லேசுவரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். மல்லேசுவரம் போலீசார், தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோசடி செய்த ரூ.12 கோடி குறித்து 2 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story