2,011 இடங்களில் நோய் பரப்பும் கொசு புழுக்கள் கண்டுபிடித்து அழிப்பு மாநகராட்சி தகவல்


2,011 இடங்களில் நோய் பரப்பும் கொசு புழுக்கள் கண்டுபிடித்து அழிப்பு மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 29 March 2018 3:30 AM IST (Updated: 29 March 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 2 ஆயிரத்து 11 இடங்களில் நோய் பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியானது கண்டு பிடித்து அழிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் 2 ஆயிரத்து 11 இடங்களில் நோய் பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியானது கண்டு பிடித்து அழிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

கொசு உற்பத்தி

மும்பையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் மழைக்காலம் ஆகும். ஆண்டுதோறும் மழைக்கால நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப் படுகிறார்கள். நோய் பரப்பும் கொசு உற்பத்தியின் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் மும்பை நகரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 17 பேர் பலியானார்கள். கொசு வினால் நோய் பரவுவதை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

2 ஆயிரத்து 11 இடங்களில்...

இந்த ஆண்டு மும்பையில் மழைக்காலம் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு கொசு புழுக்கள் (லார்வே) அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் சென்ற 19-ந் தேதி வரை மும்பையில் மேற்கொண்ட ஆய்வில் 2 ஆயிரத்து 11 இடங் களில் கொசு உற்பத்தியானது கண்டறியப் பட்டு, அதில் வளர்ந்து இருந்த கொசுப் புழுக்கள் ‘டேமேபோஸ்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story