போர்டை அகற்றாததால் அக்கப்போர்


போர்டை அகற்றாததால் அக்கப்போர்
x
தினத்தந்தி 30 March 2018 9:30 AM IST (Updated: 29 March 2018 4:10 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து நாட்டின் யார்ஷெயர் நகரில் ஒரு கடைக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருமாம்.

இங்கிலாந்து நாட்டின் யார்ஷெயர் நகரில் ஒரு கடைக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருமாம். பேசுபவர்..., ‘‘உங்கள் கடைக்கு நான் அடிக்கடி வந்து செல்கிறோன். அப்போதெல்லாம் ஒரு தவறு என்னுடைய கண்களில் தென்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதை நீங்களே திருத்துங்கள். இல்லையேல் நான் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பேன்’’ என்று செல்லமாக மிரட்டியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இதை பெரிதுபடுத்தாத கடைக்காரருக்கு நாளடைவில் பெரும் தொல்லையாக மாறிவிட்டதாம். ஏனெனில் முன்பெல்லாம் தொலைபேசியில் ஒருமுறை பேசியவர், நாளாக நாளாக அடிக்கடி பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடல்கள் சில சமயங்களில் தகாத வார்த்தைகள் வரை செல்லவே கடையை அலசி ஆராய்ந்திருக்கிறார். அப்போதும் தவறு தென்படவில்லை.

அப்புறம் என்ன, நம்ம ஆளு வழக்கம்போலவே தொலைபேசியில் குடைச்சல் கொடுக்க, கடைக்காரர் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். வார்த்தை போர் முற்றி, போனை உடைக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. அப்போதுதான் கடை ஊழியர் அந்த தவறை கண்டுபிடித்திருக்கிறார்.

‘‘கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. சலுகை விலையில் உடைகளை வாங்குங்கள்’’ என்ற விளம்பர பலகையை, கடை முகப்பிலிருந்து கழற்றாததால் தான் இந்த அக்கப்போர் நடந்திருக்கிறது.

ஒருவழியாக அதை அகற்றியதும், தொலைபேசி சிணுங்கியதாம். இம்முறை பேசியவர், ‘‘கிறிஸ்துமஸ் முடிந்து ஈஸ்டர் திருவிழாவே வந்துவிட்டது. ஆனால் நீங்கள் கிறிஸ்துமஸ் விளம்பர பலகைகளையே எடுக்கவில்லை. அதை சுட்டிக்காட்டவே இப்படி நடந்துகொண்டேன். மன்னித்துவிடுங்கள். ஈஸ்டர் வாழ்த்துகள்’’ என்று தன்மையாக பேசி, விடைபெற்றிருக்கிறார்.

# ஹலோ..., பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா?, எப்போ சார் கடைய திறப்பீங்க..?

Next Story