மாணவி கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி தப்பியோட்டம்
மாணவி கடத்தல் வழக்கில் கைதாகி குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி தப்பியோடிவிட்டார்.
குளித்தலை,
தோகைமலை அருகே உள்ள ப.உடையாபட்டியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் கார் டிரைவரான கடவூர் அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த ஆண்டிநாயக்கர் மகன் துரைராஜ்(வயது 25) போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட துரைராஜ் குளித்தலை கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குளித்தலை கிளை சிறைச்சாலையின் முகப்பு வாயிலில் சுத்தம் செய்யும் பணியை துரைராஜ் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த சிறை காவலரை ஏமாற்றிவிட்டு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குளித்தலை கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் கந்தசாமி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீசார் சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய துரைராஜை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குளித்தலை கிளைச்சிறைச்சாலைக்கு வந்த திருச்சி மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன், துரைராஜ் தப்பியோடியது குறித்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கைதி தப்பியோடியது தொடர்பாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு குளித்தலை போலீசாரால் துரைராஜ் தேடப்பட்டு வருகிறார். இதுதவிர தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டும் துரைராஜ் தேடப்பட்டு வருகிறார் என்றார். குளித்தலை கிளைச்சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story